முழு ஊரடங்கின் போது பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக ஆட்டோ மற்றும டாக்சி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முழு ஊரடங்கை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கத் தடை விதித்துள்ளது.
மேலும் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் போக்குவரத்தை நிறுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த தடையால் வாடகை ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சொற்ப அளவே வருமானம் ஈட்டி வந்த நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.