Tata Harrier SUV விலை உயர்வு : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனைக்கு வந்த  Tata Harrier SUV, Mid size SUV மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.12.69 லட்சம் என்ற விலையில் வந்ததால், ஆரம்பத்தில் விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்தது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், ஹாரியர் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும், திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்தான் டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தொடர்ந்து, Harrier SUV வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஏமாற்றமான செய்தியையும் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கிறது . Harrier SUV யின் விலை ரூ.43,000 அதிகரிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

Exit mobile version