ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!!

வரும் 18ம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. சென்னையில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், வரும் 18ம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம் என்றும், நாளொன்றுக்கு ஒரு கடைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன்களின் அடிப்படையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் இயங்க அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version