விடியா அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாடு போதைக்கு அடிமையான மாநிலமாக மாறி வருகின்றது. இரண்டு ஆண்டுகளாக பொறுத்துப்பார்த்த பொதுமக்கள் தற்போது திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு போர்கொடி தூக்கியுள்ளனர்… என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்…
தமிழ்நாட்டில் விடியா ஆட்சி பொறுப்பேற்றதும், மாநிலமெங்கும் அரசு மதுபானக்கடைகளை அதிகப்படுத்தியது. தெருவுக்கு தெரு மதுபான கடைகள் உருவான நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசமில்லாமல் மதுவுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டது…. பற்றாக்குறைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் பரவலும் அதிகமானது. ஆனால் இது பற்றி கவலைப்படாத அரசு, மதுபான பார்களை 24 மணி நேரமும் செயல்படும்படி, மறைமுகமாக வழிவகை செய்து கொண்டிருக்கிறது….
இந்த நிலையில்தான் சிவகங்கை மாவட்ட மக்கள் திமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வ.உ.சி. சாலையில், 7533 எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இந்த இடத்தை சுற்றி அரசு பள்ளி, மருத்துவமனை இருக்கின்றது. பொது மக்கள் கூடும் முக்கிய பகுதி என்பதால் எந்த நேரமும் இந்த மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்…
மதுக்கடை இருப்பதால் குடிமகன்களின் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கின்றது. மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவது, அப்பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்களிடம் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, விபத்து ஏற்படுத்துவது, என தொடர் தொல்லைகள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார் என நினைத்த அம்மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர் பேசியதெல்லாம் சக்கரை பேச்சு என உணர்ந்த பொது மக்கள் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மனு கொடுத்தனர். அவர்களும் இந்த பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளனர். அவராவது நடவடிக்கை எடுப்பாரா,இல்லை போக்கு காட்டுவரா என தெரியவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என கூறியவர்கள், இன்று மது ஆறாக ஓடவிட்டு தமிழ்நாட்டையே குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர் என பொதுமக்கள் குற்றசாட்டு எழுப்பியுள்ளனர்….
– செய்தியாளர் செந்தாமரை மற்றும் பாலா துரைசாமி.
Discussion about this post