நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரத்திற்கு, மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.
இதையடுத்து, தேர்தலை சுமூகமாக நடத்தும் வகையில், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில், மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி, வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான, மே 23ம் தேதியும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.