தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா : 21 பேர் கொண்ட குழு அமைப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா பணிகளை கண்காணிக்க, 21 பேர் கொண்ட குழு அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், அடுத்த மாதம் 5-ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவினை காண தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குடமுழுக்கு விழாவினை சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடத்த வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, 21 பேர் கொண்ட உயர் மட்ட குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்த குழுவில், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Exit mobile version