தஞ்சை மற்றும் திருச்சி அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

திருக்கானூர்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட  ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் 780-க்கும் மேற்பட்ட  காளைகளும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடிக்கிய போது, பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதேபோல், திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கீழவீதி மகா மாரியம்மன் கோயிலின் 55ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

Exit mobile version