2019-ஆம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய், கபிலர், உ.வே.சா,கம்பர், சொல்லின் செல்வர், ஜி.யு.போப், உமறுப்புலவர், இளங்கோவடிகள், அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர், மறைமலையடிகளார், அயோத்திதாசப் பண்டிதர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் 2018-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் விருதாளர்களைத் தேர்வு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி கபிலர், உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், ஜி.யு.போப், உமறுப்புலவர், இளங்கோவடிகள், அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர், மறைமலையடிகளார், அயோத்திதாசப் பண்டிதர், முதலமைச்சர் கணினித் தமிழ் ஆகிய விருதுகளை பெரும் விருதாளர்களுக்கு 1 லட்ச ரூபாயும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். அதேபோல், தமிழ்த்தாய் விருதுக்கு 5 லட்ச ரூபாயும், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுக்கு 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும். மேலும் உலகத் தமிழ்ச் சங்க விருதுகளில் இலக்கிய, இலக்கண, மொழியியல் விருதுக்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை சிகாகோ தமிழ்ச் சங்கமும், அம்மா இலக்கிய விருதை உமையாள் முத்துவும், 2018-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினை நாகராசனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,சிறந்த மொழிப்பெயர்பாளர் 10 பேரும் உலகத் தமிழ்ச் சங்க விருதுக்கு 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.