தமிழக காவல்துறை ஆகா ஓகோவென செயல்படுவதாக பாராட்டு பத்திரம் வாசித்து வருகிறார் ஸ்டாலின். தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்திய அதே நாளில் தான் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தை மறைக்க மருத்துவர்களிடம் 12 லட்சம் லஞ்சம் வாங்கினார் பெண் எஸ்.ஐ. மகிதா.
பெண் எஸ்.ஐ. சிக்கியது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கதைதான். விடியா ஆட்சி அமைந்த நாளில் இருந்து, காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் சென்ற நாளில் இருந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்கா என பெயரெடுத்த தமிழகத்திற்கு காவல்துறையாலேயே அவமானம் ஏற்படும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
எங்கெங்கே யார் யார்?..
மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் ஆய்வாளர் வசந்தி என்பவர் சிவகங்கையைச் சேர்ந்த டெய்லர் அஸரத் என்பவரை மிரட்டி ஒரு லாட்ஜில் வைத்து 10 லட்சம் பறித்தார். குற்றம் செய்த தொழிலதிபரிடம் இருந்து 10 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு, ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக கைது, திருவாரூரில் ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது, தூத்துக்குடி காவல் நிலையத்தில் துப்புரவுப் பணிக்கு வந்த 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சஸ்பெண்ட், தாம்பரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை விற்று கூட்டுக் களவாணிகளாக மாறி பங்கு பிரித்த போலீஸார் என தினசரிகளின் குற்றச்செய்திகள் பக்கத்தில் தமிழக போலீஸார் தவறாமல் இடம்பிடித்து வருகின்றனர்.
தமிழக போலீஸாரால் பொதுமக்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை. துறைக்குள் பணியாற்றும் பெண் காவலர்களுக்கும் பணி பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது எதுவும் தெரியாமல் ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸாரின் செயல்பாடுகளை பாராட்டி வருகிறார் ஸ்டாலின். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் வேலி மட்டுமே மிஞ்சும், பயிர்கள் எதுவும் இருக்காது…
Discussion about this post