ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை கடந்த மாதத்தில் மட்டும் 7.2 சதவீதமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதையே, குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை 7.2 சதவீதமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், இதனை கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post