சர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் தமிழக மாணவர்கள் வெற்றி

சர்வதேச குதிரை தடைதாண்டும் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வதேச அளவில் போர்ச்சுகல் நாட்டில் பார்சிலோஸ் என்ற நகரில், கடந்த மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை குதிரை தடை தாண்டும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த 300 குதிரைகள் கலந்துகொண்டன. இந்தியாவில் இருந்து 3 குதிரைகள் மற்றும் 4 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 80 சென்டி மீட்டர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சபரி விகாஸ் 2ம் இடமும், அகில் ரித்விக் 3ம் இடமும், 100 சென்டி மீட்டர் பிரிவில் மாணவி அவந்திகா 6வது இடமும் பெற்று அசத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் குதிரைகளுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version