தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர ராஜனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெலங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளாகக் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோசியாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அவர்கள் பதவியேற்றுக்கொள்ளும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version