தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அனல் காற்றின் தாக்கம் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது