காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்தார். பா.ஜ.கவுக்கும், தி.மு.கவுக்கும் மறைமுக உடன்பாடு உள்ளதாக குற்றம்சாட்டிய தம்பிதுரை.
திமுகவுக்கு அமித்ஷா தான் ரிங்மாஸ்டர் என்றும், இதை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் கூறினார். அதிமுக அரசை பழிவாங்க, சிபிஐக்கு மத்திய அரசு மூலம் திமுக அழுத்தம் கொடுப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.