தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக முதல் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா, திருச்சியில் நடைபெற்றது. இதில் 69 மாணவ – மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயா கமலேஷ் தஹில் ரமணி, மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய நீதிபதி தஹில் ரமணி மருத்துவம், பொறியியல் துறையை அடுத்து, மாணவர்கள் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் துறையாக சட்டத்துறை உள்ளதாக கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சி காரணமாக தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம், திருச்சிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், தமிழ்நாட்டு பெண்களும், மாணவர்களும், சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து, நீதிமன்ற சேவையை ஆற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியே காரணம் என்று மாணவர்கள் கூறினர்.

Exit mobile version