மேகேதாட்டு விவகாரத்தை கண்டித்து தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

மேகேதாட்டுக்கு குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்போது பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில் மேகேதாட்டு அணைகுறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை செய்தனர்.

 

Exit mobile version