தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை அளவு தீவிரமாக இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் உடையாள் பட்டியில் 7 செ.மீ மழையும், தஞ்சை பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version