இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை தலைமை அலுவலகத்தில், இயற்கை சீற்றங்களிலிருந்து மீனவர்களை பாதுகாக்கவும், ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் வகையிலும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்த வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களுக்கு மானிய விலையில் பைபர் படகுகள் இன்ஜின் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒக்கி போன்ற புயல் காலங்களில், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக கூறினார். மீனவர்களுக்கு சாட்டிலைட் ஃபோன்கள் வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர், முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
Discussion about this post