பள்ளிக் கல்வித் தரத்தில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம்

பள்ளிக்கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 

நிதி ஆயோக் பள்ளிக்கல்வித் தரத்தை ஆய்வு செய்து, தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் – மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2016 – 2017 கல்வி ஆண்டுக்கு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், 76 புள்ளி 6 சதவீத மதிப்பெண் பெற்றுக் கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 73 புள்ளி 4 சதவீத மதிப்பெண் பெற்றுத் தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 36 புள்ளி 4 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் கடைசி இடம் பிடித்துள்ளது. மதிப்பீடு செய்ய மறுப்பு தெரிவித்த மேற்கு வங்க மாநிலம் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

Exit mobile version