ஒரு நிமிட மின்வெட்டு கூட இல்லாத மாநிலமாக தமிழகம்; அமைச்சர் தங்கமணி பெருமிதம்

ஒரு நிமிட மின்வெட்டு கூட இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கிவருவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் பகுதியில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து பேசிய அமைச்சர் தங்கமணி, திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு வரும், சட்டம் ஒழுங்கு கெடும், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று விமர்சித்தார்.

Exit mobile version