கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கின்போது எதற்கெல்லாம் தடை :
பொது மற்றும் தனியார் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது
சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் உள்பட அனைத்து பூங்காக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது
கடற்கரை பகுதிகளில் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது
தேநீர் கடைகள், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள், வணிக வளாகங்கள் போன்றவை 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
அனுமதி பெறாத திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், கோடை கால பயிற்சி முகாம்கள், நீச்சல் குளங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கின்போது எதற்கெல்லாம் அனுமதி :
பால் விநியோகம், நாளிதழ் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும்
மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை
சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்
அவரது மருத்துவ சேவைகள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்லும் வாடகை வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது
பெட்ரோல் நிலையங்கள் தடையின்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இரவு நேர காவலர்கள், பணியாளர்கள் உரிய அடையாள அட்டைகளை காண்பித்து பணியாற்றலாம்