பொய்யான தகவலை பதிவிட்டு மாட்டிக்கொண்ட திமுக அரசு

அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் 37 ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பதாக அரசு இணையதளத்தில் பார்த்து சிகிச்சைக்குச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அங்கு ஒரு ஆக்சிஜன் படுக்கை கூட காலியாக இல்லை என்பதை அறிந்து வேறு வழியின்றி தானே ஆக்ஸிஜன் வாங்கி வந்து சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இளையான்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 37 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயாராக இருப்பதாக அரசு இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நபரை உறவினர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எதுவும் இல்லை என கூறிய மருத்துவர்கள், நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளியின் உறவினர்கள் தன்னார்வலர்களி தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர்கள் ஆக்சிஜன் தயார் செய்து நோயாளிக்கு வழங்கி உயிரை காப்பாற்றியுள்ளனர். ஒரு ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கை கூட இல்லாத நிலையில், 37 படுக்கைகள் தயாராக இருப்பதாக ஆரசு இணையதளத்தில் அறிவித்திருப்பது உயிர் பலியை அதிகரிக்கும் என்று தன்னார்வலர் தெரிவித்தார்.

Exit mobile version