தமிழக அரசின் தில்லுமுள்ளு அம்பலம்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைத்து காட்டும் தமிழக அரசின் தில்லுமுள்ளு அம்பலகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, இங்கு கொரோனா தொற்று பாதிப்பை குறைத்து காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 8 ஆயிரத்து 746 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இதுவரை மொத்தம் 15 லட்சத்து 87 ஆயிரத்து 772 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல், 16 ஆம் தேதியும் அதே புள்ளி விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது அனைவரையும் சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version