அபாய கட்டத்தில் 27 மாவட்டங்கள் – ஆக்சிஜன், ஐசியூ படுக்கைகள் நிரம்பியது

தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவது அரசு வழங்கியுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போர்கால அடிப்படையில் செயல்படுவதாக கூறும் நிலையில், நிலைமையை தமிழக அரசு சரியாக கையாள்கிறதா என்று கவனிக்க வேண்டியுள்ளது…

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை மே 22ஆம் தேதி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 35 ஆயிரத்து 873 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்தின் சிகிச்சைக்கு காலியாக படுக்கைகளின் தகவல்களை தெரியப்படுத்தியுள்ளது. அதில் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியூ படுக்கைகள் பூஜ்ஜியத்திலும், ஒற்றை எண்ணிக்கையிலும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம்,தேனி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கோவிட் மருத்துவமனைகள், கோவிட் கேர் செண்டர்களில் இருந்த தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் அனைத்து நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 14 மாவட்டகளில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்…

கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 1 படுக்கையும், அரியலூர், விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 படுக்கைகளும், தென்காசியில் மூன்று தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.. ஈரோடு, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களில் பத்துக்கும் கீழ் என்ற கணக்கில் தான் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளது…

மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளிலும் இதே நிலையை காணப்படுகிறது.. தர்மபுரி, தேனி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு ஆக்சிஜன் படுக்கையும் காலியாக இல்லை..
கடலூர், சேலம் மாவட்டங்களில் தலா ஒரு ஆக்சிஜன் படுக்கையும், கள்ளக்குறிச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டகளில் தலா 2 ஆக்சிஜன் படுக்கைகளே காலியாக உள்ளது.. ராணிப்பேட்டை, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் சொற்ப கணக்கிலான ஆக்சிஜன் படுக்கைகளே காலியாக உள்ளது…

மே 22 நிலவரப்படி, தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 88. இதில் காலியாக இருக்கும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 244 மட்டுமே. அதாவது மொத்த படுக்கைகளில், பூஜ்ஜியம் புள்ளி 2 சதவீத அளவிலான ஆக்சிஜன் படுக்கைகளே காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது..

((நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை..
ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடி அலையும் நோயாளிகளின் குடும்பத்தினர்..
எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது என தேடி தேய்ந்த கண்கள் என தமிழகம் கொரோனா 2-ம் அலையில் விழி பிதுங்கி நிற்கிறது…
மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டால் தான் இந்த கொடிய நிலை சரியாகும் என்பதை உணர்வோம்… ))

Exit mobile version