பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, போராட்டத்தினால் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் தொய்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தப் போராட்டம் அரசுப் பணியாளர்கள் சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பணிகள் தொய்வின்றி நடக்க மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.