விஷால் தரப்பினர் மீதான ஊழல் புகார் எதிரொலியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தின் மீது தொடர் ஊழல் குற்றச்சாடுகள் வந்த வண்ணமிருந்தது.நடிகர் விஷால் தலைமையில் இயங்கி வந்த சங்கத்தில் வைப்பு நிதியில் ஊழல் நடந்ததாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பதில்கள் ஏதும் ஏற்கும்படியாக இல்லையென பதிவுத்துறை சார்பில் தமிழக அரசிற்கு விளக்கக் கடிதம் எழுதப்பட்டது. இதனையடுத்து தமிழ திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சேகர் என்ற அதிகாரியை சொத்துக்களை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அதிகாரங்கள் பறிபோய் உள்ளன.