கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை – இந்த நாட்கள் மட்டும்!

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், இன்று முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும், பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது இரவு 10 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வழிபாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி, தற்போது வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு, முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version