தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் கலந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் 300க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பை நடத்தினர். கொடி அணி வகுப்பிற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பொன் ரகு தலைமையேற்றார்.
தேனி மாவட்டம் போடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பை நடத்தினர். போடிநகர் தேவர் திடலில் தொடங்கிய அணிவகுப்பு, முக்கிய வீதிகள் வழியாக அம்மாகுளம் வர்த்தகர்கள் சங்க திருமணமண்டபம் அருகே நிறைவு பெற்றது.
வேலூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணை ராணுவத்தினர் 60 பேர், ஆயுதப்படையினர் 120 பேர், சிறப்பு காவல் படையினர் 35 பேர் உட்பட 309 பேர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினர். அணிவகுப்பை மாவட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பை, துணை கண்காணிப்பாளர் யுவபிரியா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் 55 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர்.