பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மதியம் கூடுகிறது. ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், கூட்டத்தில் அது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், மேகேதாட்டு அணை விவகாரம், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post