முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியின் கீழ், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மிகப்பெரிய மாநிலம், சட்ட ஒழுங்கு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்து தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்தியா டுடே குழுமம், நாடு முழுவதும் ஆய்வு நடத்தி சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
நடப்பாண்டில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மிகப்பெரிய மாநிலங்களில், தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற அஸ்தஸ்து தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேசம், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் 6-வது இடத்திலும், மகாராஷ்திரா 9-வது இடத்திலும் உள்ளன
இதேபோல், சட்ட ஒழுங்கு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களிலும் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதற்கான இரண்டு விருதுகள் தமிழக அரசு சார்பில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியின் கீழ், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மிகப்பெரிய மாநிலம், சட்ட ஒழுங்கு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்து தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.