ஜூன் 28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 28ஆம் தேதி துறை வாரியான மானிய கோரிக்கை விவாதத்திற்காக  தமிழக சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு கொறடா ராஜேந்திரன், திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 30ஆம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெற இருப்பதாக கூறினார். 

Exit mobile version