அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை 2021!

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1. “அம்மா இல்லம்” திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகள், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

2. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 ரூபாய் வழங்கும் “குல விளக்கு திட்டம்” செயல்படுத்தப்படும்.

3. நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும்.

4. அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படும்.

5. ஆண்டிற்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.

6. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும்.

7. அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லா சூரிய சக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும்.

8. பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

9. மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்கும் வகையில் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10. கல்லூரி மாணாக்கர்களுக்கு 2GB DATA வழங்கப்படும்.

11. அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.

 

https://www.youtube.com/watch?v=SQ2UQP7Fur4 

 

12. முதியோர், விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

13. திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏழை மணமக்களுக்கு “அம்மா சீர்வரிசை” பரிசாக வழங்கப்படும்.

14. அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

15. ஈழத் தமிழர் உள்ளிட்ட  7 பேர் விடுதலை செய்ய, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

16. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

17. பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக உயர்த்தப்படும்.

18. 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்

19. ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண் பெண், ஓட்டுநர்களுக்கு ரூ.25,000 மானிய விலையில் “எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ”.

20. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் செயலி, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

21. மாணவர்கள், பெற்றோர் நலன் காக்க கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

22. கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா ஆண்டு முழுவதும் விரிவுப்படுத்தப்படும். 

23. 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம்.

24. அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள்.

25. அரசு பணியில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி உறுதியாக வழங்கப்படும்.

 

https://www.youtube.com/watch?v=TIatsq_rHuw 

 

26. ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் உதவித் தொகை; முதியோர் உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

27. திருமண நிதியுதவி திட்டத்தில் பட்டதாரி பெண்களுக்கு உதவித்தொகை ரூ.60,000 ஆகவும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.35 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

28. அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

29. தொற்று நோயில் இருந்து பாதுகாக்க குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இரண்டு கொசுவலைகள் வழங்கப்படும்.

30. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற நிலை தொடர தொலைநோக்கு பார்வையுடன் மின் உற்பத்தி பெருக்கப்படும்.

31. இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை, குடியிருப்பு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

32. விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்.

33. முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

34. வேளாண் விளைபொருட்கள், இலாபகரமான விவசாய விற்பனை நெறிமுறை மற்றும் வழிகாட்டும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

35. வாழை விவசாயிகளின் வாழ்வு சிறக்க வாழையிலிருந்து நூல் எடுத்து ஆடை செய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்.

36. குடிமராமத்து மேற்கொள்ளப்பட்ட நீர் நிலைகளின் கரைகள், புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்க்கப்படும்.

37. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு மற்றும் பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும்.

38. சூரிய சக்தி மின்மோட்டார் பம்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

39. வேளாண் பெருமக்களின் நலன்காக்க மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும்.

40. நெல் மற்றும் கரும்பு உற்பத்திக்கான செலவை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

41. வேளாண் அறிஞர் இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

42. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

43. குறைந்த வாடகையில் உள்ளூரிலேயே பண்ணை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்கும் வகையில், பண்ணை இயந்திரமயமாக்கல் ஊக்கப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

44. வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள் டெல்டா மாவட்டங்களில் பிரத்யேகமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45. முதல்வரின் விவசாயி வங்கித் திட்டம் மூலம், 309 தாலுக்காக்களில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாடகை முறையில் எளிதில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

46. நீலகிரியில் காய், கனிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

47. வறண்ட நிலத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரேல் பல்கலைக் கழகம் மூலம் ஆராய்ச்சி செய்ய ஆய்வு கூடம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

48. நீரா பானம் மூலம் இளநீரை தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யபடும், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் உயர்த்தப்படும், விலை குறையும் போதெல்லாம் கொப்பறை தேங்காய் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

49. கரிசல், தூர்வை மற்றும் களி மண் வகைகள் தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=eFSm6cst53I 

 

50. கால்நடை விவசாயிகளின் வாழ்வு சிறக்க கால்நடை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

51. கால்நடை விவசாயிகளின் வாழ்வு சிறக்க வாரியம் அமைக்கப்படும்.

52. தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

53. தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்.

54. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்திட நடவடிக்கை

55. மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500-ஆக உயர்த்தப்படும்.

56. 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கால அளவு 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

57. அம்மா பசுமை வீடு திட்டத்தின் கீழ் மானியத் தொகையை ரூ.2,43,000-ல் இருந்து ரூ.3,40,000ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

58. பொங்கல் திருநாளன்று வழங்கப்பட்டு வரும் பரிசுப் பொருட்களுடன் உதவித் தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.

59. 2 மாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீட்டு நடைமுறைத்தப்படும்.

60. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

61. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

62. அரசுப்பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.

 

https://www.youtube.com/watch?v=TIatsq_rHuw 

 

63. அங்கன்வாடி குழந்தைகள் முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கும் தினந்தோறும் 200 மில்லி லிட்டர் பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும். 

64. பால் கொள்முதல் விலை 2 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்றும், நுகர்வோரின் நலன் கருதி பால் விற்பனை விலை 2 ரூபாய் குறைக்கப்படும்.

65. அம்மா மினி கிளினிக்குகளுக்கு நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் அமைக்கும் பணி சிறப்புத்திட்டமாக செயல்படுத்தப்படும்.

66. புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து டாக்டர் சாந்தா நினைவு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்கு Linear Accelerator வசதி, கருத்தரிப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

67. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகை 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரமாக உயர்த்தப்படும்.

 

https://www.youtube.com/watch?v=NE2WvviP_7o 

 

68. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைப்பு நிதி 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

69. மகளிர் வங்கி உருவாக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான அளவு கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

70. சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த, மின்னணு வணிக முறைக்கு ஊக்குவிக்கப்படும்.

71. ஏழை-எளிய நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் “அம்மா பேங்கிங் கார்டு” வழங்கப்படும்.

72. தனியாரிடம் பெற்ற கடன்களை சுலபத் தவணையில் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 

73. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட “அம்மா ரோந்து வாகனங்கள்” மற்ற நகரஙட்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

74. சட்டம் ஒழுங்கை மேலும் மேம்படுத்தும் வகையில், 2-ம் கட்ட நகரங்களிலும் உலகத் தரத்திலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

75. 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

76. ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண் பெண், ஓட்டுநர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் “எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம்”

77. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில், படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் 

78. கூட்டுறவு வீட்டு வசதி சங்கக் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். 

79. மதுரை விமான நிலையத்திற்கு தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும்.

80. மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்த தடைச் சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும். 

 

 

 

81. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். 

82. அவசியமான இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=X5Zc5xgPmTo 

 

83. சிறுபான்மை மக்களின் பெருவாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரால் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

84. திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்த அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம் உருவாக்கப்படும்.

85. ஜெர்மானிய தமிழ் அறிஞர் சீகன் பால்கு வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு, பொது நூலகம் அமைக்கப்படும்.  

 86. இந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோருக்கு கயிலை மலை மானசரோவர், நேபாளத்தின் முக்திநாத், ஹரித்துவார், ஜம்முவின் வைஷ்ணவி தேவி ஆலயங்களுக்கு சென்று வர பயணக்கட்டண சலுகை உயர்த்தி வழங்கப்படும். 

87. இஸ்லாமியர்கள் தற்போது ஹஜ் பயணத்திற்கு செல்ல அரசால் வழங்கப்படும் மானியமான 6 கோடி ரூபாயை, 10 கோடியாக உயர்த்தி  வழங்கப்படும்.

88. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் ஆயிரம் பேருக்கு 37 ஆயிரம் அரசு வழங்கும் திட்டத்தில் முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும். 

89. கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் அடிப்படை பணியாளர்களான ஓசியார், கோயில்பிள்ளை, உபதேசியார் போன்றோரின் நலன் காக்க நலவாரியம் அமைக்கப்படும். 

90. சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உடலை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில் அரசு தேவையான இடங்களை கண்டறிந்து போதுமான இடங்களை விலையில்லாமல் வழங்கும்

91. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்கள், இஸ்லாமிய மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்கள் பழுதடைந்து இருப்பின், அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

92. கிராம ஊர்க்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

93. வருமானம் இல்லாத அனைத்து மத கோயில்களுக்கும் “இலவச ஒரு விளக்கு திட்டம்” அமல்படுத்தப்படும்.

94. திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “அன்னதானத் திட்டம்” மேலும் விரிவுப்படுத்தப்படும்

95. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

 

https://www.youtube.com/watch?v=K2mVFfm8Pw4 

 

96. அனைத்து மாவட்டங்களில் தேவையான வசதிகளுடனும், “மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்” அமைக்கப்படும்.

97. தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

98. பழுதடைந்த ஆதிதிராவிடர் மக்களின் தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும். 

99. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்கள் மதம் மாறினால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

100. படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் போன்ற இனத்தை சேர்ந்தவர்கள், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

101. மாநில அளவிலான, “தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்” விரைவில் அமைக்கப்படும். 

102. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்ட நிதி, அவர்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் சிறப்பு தனிச்சட்டம் இயற்றப்படும்.

103. புதிய நிலமெடுப்பு சட்டத்தின்படி உரிய இழப்பீடுகள் அளித்த பின்னரே, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

104. திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க, புரட்சித்தலைவி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி மீட்கப்படும். 

 

https://www.youtube.com/watch?v=rMPrZfzjVVQ 

 

105. ஏழை மீனவர்களின் உறுதித்தன்மை இல்லாத வீடுகளுக்கு பதிலாக, விலையில்லா வீடுகள் கட்டித்தரப்படும்.

106. விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டரில் இருந்து 20,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

107. நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் எரி எண்ணெய் ஆண்டொன்றுக்கு 4,000 லிட்டரில் இருந்து 5,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

108. நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஆண்டொன்றுக்கு 3,400 லிட்டரில் இருந்து 4,500 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

109. மீனவ குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 5000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

110. மீனவர், மீனவ மகளிருக்கான சேமிப்பு மற்றும் நிவாரணம் 4,500 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக வழங்கப்படும்.

111. மீனவர்கள் கடனுதவி பெற ஏதுவாக கூட்டுறவு மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும். 

 

112. விபத்தில் உயிரிழந்த மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

113. கடற்பாசி, கடல் மீனவளர்ப்பு, உள்நாட்டு மீன்வளர்ப்புக்கு விரிவான கொள்கை உருவாக்கப்படும்.

114. விவசாயத்திற்கு பயன்படாத கடலோர நிலங்கள் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்த திட்டம் உருவாக்கப்படும்.

115. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மொத்த மீன் விற்பனை சந்தை ஏற்படுத்தப்படும்.

116. ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் “கடல்பொருள் ஏற்றுமதி மண்டலம்” உருவாக்கப்படும்.

117. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய “மீன்பிடி துறைமுகங்கள்”.

118. உள்நாட்டு மீனவர்கள், விவசாயிகள் நலன்கருதி தேவையான இடங்களில் “பண்ணை குட்டைகள்” அமைக்கப்படும்.

119. கடலோர நிலப்பரப்பை பாதுகாக்க “கருங்கல் தடுப்புச் சுவர்” அமைக்கப்படும்.

 

https://www.youtube.com/watch?v=fUzOE-gYw3E 

 

120. நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

121. விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்படும்.

122. கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

123. “தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம்” ஏற்படுத்தப்பட்டு தேவையான பஞ்சினை பஞ்சு உற்பத்தி காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

124. கைத்தறி ஆடைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். 

125. உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்தி நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நூல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

126. கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். 

127. நடைப்பாதை வியாபாரிகளுக்கு உத்தரவாதமின்றி 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாமல் வழங்கப்படும் “சுழல் நிதிக் கடன் திட்டம்” விரிவாக்கம் செய்யப்படும். 

128. அனைத்து அமைப்பு சாரா கூலித் தொழிலாளர்களுக்கும் வட்டியில்லா நுண்கடன் 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

129. அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

130. வணிகர் நலனை கருத்தில் கொண்டு வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் வியாபாரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

131. அரசு பணிகளிலும், உள்ளாட்சி அமைப்பு பணிகளிலும் இளைஞர்களை பணியமர்த்துவதில் பொது போட்டித் தேர்வு மூலம் அவர்கள் பெறும் தகுதியின் அடிப்படையில் பாரபட்சமின்றி பணியமர்த்தப்படும் செயல்முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும். 

132. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத் தொகை இரட்டிப்பாக உயர்ந்தி வழங்க நடவடிக்கை 

133. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணிகளில் வேலை வாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.

134. அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 

135. இளைஞர்களுக்கு இலாபகரமான புதிய தொழில்கள் துவங்க “START UP LOAN திட்டம்”, தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு “SINGLE WINDOW SYESTEM” முறையில் ஒரு மாதத்தில் தொழில் தொடங்க ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

 

https://www.youtube.com/watch?v=zw3MI29xtLk 

 

136. தமிழர்களுக்கு தனியார் துறை தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

137.  அரசு ஆசியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்று விடுபட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்க பரிசீலிக்கப்படும்.

138. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியத் தொகையை அரசே நிர்ணயம் செய்ய நடவடிக்கை. 

139. ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மினி IT PARK உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

140. அனைத்து அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து “வில்லையில்லா விபத்துக் காப்பீட்டுத் திட்டம்” துவங்கப்படும். 

141. சென்னை புறநகர் பகுதியில் அதிநவீன ஒருங்கிணைந்த மோட்டார் வாகன வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

142. தொழிற்பேட்டை இல்லாத மாவட்டங்களில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை நிறுவப்படும். 

143. சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின்சக்தி திறன், 250 குதிரை மின்சக்தி திறனாக உயர்த்தப்படும்.

144. 3வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2022 ஆம் ஆண்டு நடத்தப்படும்.

145. சென்னையில் மருந்து பூங்கா, தமிழ்நாட்டில் இராணுவத் தளவாடங்கள் பூங்கா, ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

146. பொது போக்குவரத்து திட்டத்தின் மூலம், 5 ஆயிரம் மின்சார பேருந்துகளும், அரசுக்கு சொந்தமான 5 ஆயிரம் மினி பேருந்துகளும் இணைக்கப்படும்.

147. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உப்பளத் தொழிலாளர்களுக்கும், மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

148. வெள்ளிக் கொலுசு ஆபரணத் தொழில் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெள்ளி நகை தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரியை நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 

149.  அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.

150. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

151. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். 

152. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கிட, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 

153. கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை, துரிதமாக செயல்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் 

 

154. பரம்பிக்குளம்-ஆழியார் அணைக்கட்டுத் திட்டத்தில் ஆணைமலையாறு – நல்லாறு திட்டத்தையும், பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தையும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.  

155. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கிவைக்கும் பணி உடனடியாக துவங்கப்படும்.

156. அத்திகடவு – அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி – கருமேனியாறு, காவிரி-குண்டாறு உட்பட பாசனக் கால்வாய் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.

157. சென்னை மற்றும் இராமேஸ்வரம்-தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத் தரத்தில் “கடல் சுற்றுலா பூங்காக்கள்” அமைக்கப்படும்.

158. மாண்பமை உச்சநீதிமன்ற கிளையினை சென்னையில் நிறுவிட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.  

159. தமிழ்நாடு வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு சேமநல நிதியினை 7 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

160. ஏழ்மையிலும், வறுமையிலும் தமிழகத்தில் வாழும் போயர் மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்

161. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாவலர் நெடுஞ்ச்செழியன் உட்பட தலைவர்களுக்கு திருவுருவச் சிலை, மணி மண்டபம் அமைக்கப்படும்.

162. சிறு, குறு தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க மானியம் கூடுதலாக வழங்கப்படும். 

163. சென்னை காவனூரில் 260 ஏக்கர் பரப்பளவில் நிதி தொழில்நுட்ப நகர் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

164. 60 வயதான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம்; நிகழ்ச்சி இல்லாத காலங்களில் ரூ.5,000 நிவாரணம்.

165. பத்திரிகையாளர் குடும்ப நிவாரணம் உயர்த்தப்படும்; பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

 

 

 

Exit mobile version