தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி

இருமாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால் மேகதாது பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல, சகோதர சகோதரிகள் என்று கூறினார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், மழை பொய்த்துவிட்டால்தான் தண்ணீர் திறந்துவிடுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இருமாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மேகதாது பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று குமாரசாமி கூறினார்.

Exit mobile version