வரும் 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அயனாவரத்தில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழையும், பெரம்பூரில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மீனவர்கள் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.