நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவி ஜீவிதாவை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை அனகாபுத்தூர் கோபால் செட்டி தெருவில் உள்ள ஜீவிதாவின் வீட்டிற்கு வந்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ஜீவிதா குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவியின் கல்விச்செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, வசதி குறைவாக இருந்த சூழ்நிலையிலும் மாணவி ஜீவிதா வெற்றி பெற்றிருப்பது மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.