மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் மூலமாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை ஏற்பாடு செய்துவிட்டதாக கூறியுள்ளார். தென்னை மரங்களை அகற்ற மத்திய அரசு உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கான தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர். மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ள தமிழிசை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாக போராடுவதாகவும் கூறியுள்ளார்.