ஹாட்ரிக் தோல்வியில் தமிழ் தலைவாஸ்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸை எதிர் கொண்டது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இப்போட்டியில் பெங்களூரு புல்ஸின் நட்சத்திர ஆட்டக்காரர் பவன் ஷெராவத் அடுத்தடுத்து 8 புள்ளிகளை பெற்று தமிழ் தலைவாஸுக்கு அதிர்ச்சியளித்தார்.

முதல்பாதி முடிவில் 28 க்கு 12 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கியிருந்த தமிழ் தலைவாஸுக்கு, அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனுமான அஜய் தாக்கூர், அடுத்தடுத்து சில புள்ளிகளை பெற்று ஆறுதல் அளித்தார்.

இதையடுத்து, பெங்களூருவின் நட்சத்திர ஆட்டக்காரரான பவன் ஷெராவத் ஒரெ ரெய்டில் 5 புள்ளிகள் பெற்றதுடன் மொத்தம் 20 புள்ளிகளை பெற்று அனைவரையும் வியக்க வைத்தார்.

முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48 க்கு 37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸை தோற்கடித்தது. இந்த போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version