தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம் : இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியிடம் விசாரணை

இலங்கையில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அந்நாட்டு கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேரம் நடத்தப்பட்டது. இலங்கையின் அதிபராக ராஜபக்சே இருந்தபோது கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமல் போயினர். இதுதொடர்பான விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவிடம் அந்நாட்டு குற்றவியல் விசாரணை திணைக்களம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. புதன்கிழமையன்று மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version