அதிமுகவிற்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆதரவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதற்கான ஆதரவு கடிதத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிடம் நேரில் அளித்தார். தங்களது ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.

Exit mobile version