பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இணைதளங்களும் முடக்கப்பட்ட நிலையில், ரஜினியின் 2.ஓ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி கதாநாயகர்கள் மற்றும் முக்கிய திரைப்படங்களை தேதி குறிப்பிட்டு, வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் 2.ஓ படத்தையும் வெளியிட்டுள்ளனர். முன்னதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தையும், அதுசார்ந்த 12 ஆயிரம் இணைய குறியீடுகளையும் முடக்க உத்தரவிட்டது.
இதனால், லைகா மற்றும் ரஜினி தரப்பு நிம்மதி அடைந்திருந்த நிலையில், படம் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டிக்கெட் விற்பனை மந்தமாகி, ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பில்லாத நிலையில், 2.ஓ படம் இணையதளத்தில் வெளியாகியிருப்பது தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.