தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த 2 பேர், ஈரோட்டை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த 2 பேர் என 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 6 பேருக்கு பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version