சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்றது தமிழகம்

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்தெடுக்கப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்பட்டது. 

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது. இதனடிப்படையில், சிறந்த மாநிலம் மற்றும் தமிழகத்தில் சிறந்த மாவட்டத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இதற்கான விருதினை வழங்க, தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் இதில், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு உதவிய தருமபுரிக்கு, சிறந்த மாவட்டத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது தமிழகத்திற்கு 4வது முறையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version