அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற தமிழகம் வலியுறுத்தும்

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரவையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர், அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 50 லட்சம் உயர்த்தி 3 கோடியாக அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் நியாய விலைக்கடை பணியாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேபோல், நியாயவிலை கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு வழங்கப்படும் படி, 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய துணை முதலமைச்சர், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version