நல்லாட்சியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம்!

நல்லாட்சியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகம் பெற்றுள்ள புதிய பெருமை குறித்து விரிவாகக் காண்போம்…  

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு இந்திய மாநிலங்களில் நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகேட்புக்கான துறை நேற்று வெளியிட்டது.

18 பெரிய மாநிலங்களும்,11 சிறிய மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் தமிழகம் நல்லாட்சி நிர்வாகத்தில் 5.62 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைக் கைப்பற்றி உள்ளது.
 
இந்தப் பட்டியலில் இமாச்சலப் பிரதேசம் 5.22 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று சிறிய மாநிலங்கள் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இது போலவே 4.69 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்ற புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் பிரிவில் முதலிடத்தைப்
பெற்றுள்ளது. தமிழகம் 5.62 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று அளவில் பெரிய மாநிலங்களின் பட்டியலிலும், ஒட்டுமொத்தமாகவும் முதல் இடத்தில் உள்ளது.
 
நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களுக்கான இந்தப் பட்டியலானது, விவசாயம், உட்கட்டமைப்பு, பொதுசுகாதாரம் உள்ளிட்ட 10 துணைப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் 10 துறைகளில் மாநில அரசுகளின் திட்டமிடுதல் மற்றும் செயலாக்கம் – ஆகிய இரண்டு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மாநிலங்களின் மதிப்பெண்கள் அளவிடப்பட்டு உள்ளன.
 
நல்லாட்சிக்கான 10 துணைப் பட்டியல்களில், சிறந்த உட்கட்டமைப்பிற்கான பட்டியல், நீதி வழங்கல் மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான பட்டியல் ஆகிய 2 பட்டியல்களில் தமிழகம் தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்று உள்ளது.(( GFX OUT))
 
பொது சுகாதாரத்திற்கான பட்டியலில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தையும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான பட்டியலில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் தமிழகம் பெற்று உள்ளது. இந்த அனைத்துப் பட்டியல்களில் பெற்ற மதிப்பெண் புள்ளிகளின் கூட்டுத் தொகையின் அடிப்படையிலேயே தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த நல்லாட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சிக்கு இந்திய அரசு அளித்த நற்சான்றிதழாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகின்றது.
 
 
தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி உருவாக்கப்பட்ட நல்லாட்சி நடைபெறும்
மாநிலங்களின் பட்டியல் வெளியானது.
 
பட்டியலில் 18 பெரிய மாநிலங்களும்,11 சிறிய மாநிலங்களும், 7 யூனியன்
பிரதேசங்களும் இடம்பெற்றன.
 
தமிழகம் நல்லாட்சி நிர்வாகத்தில் தமிழகம் 5.62 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று
தேசிய அளவில் முதலிடம்.
 
சிறிய மாநிலங்களில் ஹிமாசலப் பிரதேசம், யூனியன் பிரதேசங்களில் புதுவை,
ஒட்டுமொத்தமாக தமிழகம் முதலிடம்!.
 
நல்லாட்சி நடைபெறும் மாநிலங்களுக்கான பட்டியல் 10 துணைப் பட்டியல்களை
அடிப்படையாகக் கொண்டது.
 
சிறந்த உட்கட்டமைப்பு, நீதி வழங்கல் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில்
தமிழகம் முதலிடம்.
 
பொது சுகாதாரத்தில் தமிழகம் 2ஆம் இடம். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தமிழகம்
3ஆம் இடம்.
 
ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளிகளின் கூட்டுத்தொகை அடிப்படையில் தமிழகம்
நல்லாட்சியில் முதலிடம்

Exit mobile version