காற்றுமாசு குறைவாக இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்

காற்று மாசு குறைவாக இருக்கும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும், தொழிற்கட்டமைப்பு வசதிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுசூழல் கட்டுப்பாடு பொறியாளர் அலுவலகத்தில், தொழில்முனைவோர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி, கருப்பணன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காக்களூர் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளிலின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பணன், தொழில் சாலை கட்டமைப்பு வசதிகள், ஆன் லைன் பதிவு மற்றும் புதுப்பித்தலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் 9443347777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனடி தீர்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version