புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது – முதலமைச்சர்

நாமக்கல்லில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட COMPRESSED BIO GAS இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி மூலமாக இயந்திரத்தின் செயல்பாடு துவங்கி வைக்கப்பட்டது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். COMPRESSED BIO GAS இயந்திரத்தின் செயல்பாட்டை துவக்கி வைத்த பிறகு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய இயந்திரம் மூலம் தினமும் 15 டன் COMPRESSED BIO GAS மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும் எனக் கூறினார். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி தயாரிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்திற்கு COMPRESSED BIO GAS அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கும், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், முதலமைச்சர் நன்றி தெரிவித்து கொண்டார். இதுபோன்ற மேலும் பல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

Exit mobile version