உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பொறியியல் மற்றும் மேலாண்மை துறையை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.பின்னர் செய்தியாளர்களீடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை நாட்டிலேயே அதிகமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ஆயிரத்து 585 புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவித்த காரணத்தால் உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்