தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, இன்று காலை புறப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன விமானப்படை விமானம் மூலம், மதியம் சுமார் 1.55 மணியளவில் சென்னை வந்தடைந்த பின்பு, தவில், நாதஸ்வரம் இசைத்தும், கொம்பு ஊதியும், சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டு பாரம்பரிய கலைநிகழ்வுகளுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதை பார்த்த சீன அதிபர் ஜி ஜின்பிங், கையை அசைத்து, உற்சாகப்படுத்தினார்.