தேசிய டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணி சாதனை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து மாஸ்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 64 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.போட்டி முடிவில் 25 தங்கப் பதக்கங்களைப் பெற்று தமிழக அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்று சாதனை படைத்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தேக்வாண்டோ சங்க மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் 29 போட்டியாளர்கள் பங்கேற்று 13 தங்கம் 3 வெள்ளி 12 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனர்.இதனையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Exit mobile version