தமிழ்நாட்டில் வேகமெடுத்தும் வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரே நாளில் 7 ஆயிரத்து 819ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் உள்பட, தமிழகம் முழுவதும் புதிதாக 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 4 ஆயிரத்து 733 பேர் ஆண்கள் என்றும், 3 ஆயிரத்து 86 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இரண்டாயிரத்து 564 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 255 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 772 பேரும், கோவை மாவட்டத்தில் 540 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 383 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 244 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 225 பேரும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், மொத்த பாதிப்பு 9 லட்சத்து 54 ஆயிரத்து 948ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரத்து 663ஆக உள்ளது. தற்போது, 54 ஆயிரத்து 315 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.